ஏகே 62 படத்திலிருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவன் அதிரடி முடிவை எடுத்திருக்கின்றாராம்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் கதை திருப்தி அளிக்காததால் படத்திலிருந்து விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்கள். இதனால் ஏகே 62 திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க இருக்கின்றார். சில நாட்களில் இத்திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஏகே 62 திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு எடுத்து இருப்பதாக செய்தி பரவி வருகின்றது. லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா தனது கையில் இருக்கும் போது கைநலுவிய வாய்ப்பை நினைத்து ஏன் கவலைப்பட வேண்டும் என்ற முடிவில் இருக்கின்றாராம் விக்னேஷ் சிவன். அடுத்ததாக நயன்தாராவை வைத்து பக்கா கமர்சியல் திரைப்படம் ஒன்று கொடுத்து தன்னை நிரூபிக்கும் முயற்சியில் விக்னேஷ் இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.