இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியான பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாகவும் மற்றும் தீபிகா படுகோனே கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 1000 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள  மாணவிகள் பதான் திரைப்பட பாடலுக்கு நடனமாடிய போது, அவர்களுடன் இணைந்து பேராசிரியைகளும் நடனமாடி உள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ‘நமக்கு பாடம் கற்றுத்தரவும் நம்முடன் மகிழ்ச்சியாக இருக்கும் ஆசிரியைகள் அமைவது மிக பெரிய அதிர்ஷ்டம் என்றும் அனைவரும் கல்வியின் நட்சத்திரங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.