தி ஃபேமிலி மேன் வெப் தொடர் புகழ்  ராஜ் மற்றும் டி.கே. தற்போது சமந்தா மற்றும் வருண் தவான் லீடிங் ரோடில் நடிக்கும் சிடாடல் என்னும் வெப் தொடரை இயக்கி வருகிறார்கள். இவர்கள் இயக்கத்தில் அண்மையில் விஜய் சேதுபதி நடித்த பார்சி வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்பிறகு சிடாடல் வெப் தொடருக்காக தற்போது படக்குழுவினர் நைனிடால் சென்றிருக்கிறார்கள். இந்த வெப் தொடரில் வருண் தவான் மற்றும் சமந்தா உளவாளியாக நடிப்பதால் படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. இதன் காரணமாக ஹாலிவுட் பயிற்சியாளர் சமந்தா மற்றும் வருண் தவானுக்கு பயிற்சி கொடுப்பதற்காக வரவழைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் நைனிடாலில் 8 டிகிரி செல்சியஸ் குளிரில் நடிகை சமந்தா கடுமையான குத்துச்சண்டை பயிற்சி எடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை நடிகை சமந்தா வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர். அதாவது மயோசிடிஸ் எனும் நோயினால் சமந்தா பாதிக்கப்பட்ட நிலையில் இப்படி கடும் குளிரில் கடுமையான பயிற்சி எடுக்கலாமா என்று ரசிகர்கள் பலரும் சமந்தாவுக்கு அட்வைஸ் கூறி வருகிறார்கள். நீங்கள் உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்கள். மேலும் எப்போதும் நடிகை சமந்தா நடிக்கும் படங்களில் அவருக்கு டூப் போடுவது பிடிக்காது என்பதால் டப்பிங் முதற்கொண்டு அவரே  பேசுவார். இதன் காரணமாக ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சிடாடல் வெப் தொடரிலும் சமந்தா டூப் போடாமல் தான் நடிப்பார் என்று கூறப்படுகிறது.