தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி பயிற்சி அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது.
பணியின் பெயர்: உதவி பயிற்சி அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்
வயது வரம்பு: 18 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: பட்டப்படிப்பு
சம்பளம்: ரூ.35,900 முதல் ரூ.1,31,500
கணினி வழித்தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
உதவி பயிற்சி அலுவலர் பணிக்கான கணினி வழித்தேர்வு அக்டோபர் மாதம் 5ம் தேதி காலை(தாள் 1) மற்றும் மதியம்(தாள் 2) நடக்கும்.
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு அக்டோபர் 6-ம் தேதி காலையில் தேர்வு நடக்கும்.