
கடந்த 2019 -ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டெல்லியை சேர்ந்த முகமது முக்தார் அலி என்பவர் போலிஸ் ஹெல்ப்லைன் தொலைபேசி எண் 100 அழைத்து பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியது மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 56-இன் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லி மெட்ரோபாலிட்டின் மாஜிஸ்திரேட் கோர்ட் இந்த வழக்கை விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில் முகமது முக்தார் அலி யாரையும் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்ததாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாமல் போலீஸ் தரப்பு தவறிவிட்டது எனவும் மாஜிஸ்திரேட் சுபம் கூறி, அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.