பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர்கள் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா. இந்த சீரியலில் நடிக்கும் போது இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி ஒரு மாதத்திற்குள் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் விவாகரத்து பெற இருக்கிறார்கள் என்று இணையதளத்தில் செய்திகள் வெளி வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் தங்கள் இணையதள பக்கங்களில் இருந்து திருமண புகைப்படங்களையும் நீக்கிவிட்டனர். இந்நிலையில் திருமணமான 15-வது நாளிலிருந்தே சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் பிரிந்து தான் வாழ்ந்து வருவதாக தற்போது விஷ்ணுகாந்த் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது அவர்களின் பிரிவுக்கு சம்யுக்தாவின் அப்பாதான் காரணம் என்று கூறியுள்ளார்.
இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிறகு சம்யுக்தா குடும்பத்துடன் சேராமல் இருந்த அவருடைய அப்பா திருமணத்திற்கு பிறகு அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதுதான் பிரச்சினை வர தொடங்கியுள்ளது. இதேபோன்று திருமணத்திற்கு முன்பு விஷ்ணுகாந்த் பற்றி சம்யுக்தாவின் தோழி ஒருவர் தவறாக கூறியுள்ளார். இவரிடம் நட்பை தொடர வேண்டாம் என விஷ்ணுகாந்த் கூறிய போதும் சம்யுக்தா அதை கேட்கவில்லை. இப்படி தொடர்ந்து பிரச்சினைகள் வந்ததால்தான் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் திருமணமான ஒரே மாதத்தில் நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் பிரிந்தது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.