நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர் , காமெடியன், யூடியூப் பிரபலம் என தமிழ் திரையுலகில் பல திறமைகளை வெளிக்காட்டியவர் மனோபாலா. இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மே 3ம் தேதி இறந்தார். மனோபாலா இறப்பு பிறகு அவரை பற்றிய பல விஷயங்களை பிரபலங்கள் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர். அதன்படி மனோபாலா பல ஆண்டுகளுக்கு முன் மற்றொரு பிரபலத்திற்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன்னதாக மனோபாலா சித்ரா லட்சுமணனுக்கு இக்கடிதத்தை எழுதியுள்ளார். அப்போது மனோபாலா, சித்ரா லட்சுமணன், மணிவண்ணன் ஆகியோர் பாரதிராஜா திரைப்பட பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்துள்ளனர். அதில் டியர் சித்ரா என்னமோ சட்டென்று ஒரு எண்ணம். ஏதோ எழுதவேண்டும் என்றபோது நினைவுக்கு வந்தது  நீங்கள்தான். தப்பா இது..? ஒரு மன அரிப்பு, எங்கே எப்போது என அலைந்து கொண்டிருக்கிற மனதை சாந்தப்படுத்திக்கொள்ள ஒரு முயற்சி. நாம் அதிகமாக பேசியதில்லை.

அதே நேரம் பார்டர் தாண்டி நீங்களும் வந்ததில்லை நானும் வந்ததில்லை. நான் என் தொழிலை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும். நான் ஏதாவது சாதிக்கவேண்டும் என்று நினைத்து வந்தேன். எனினும் இது என்ன சித்ரா எல்லாம் இடறல் மயம், ஏன் இப்படி ஆனது?, அனைத்து இடங்களிலும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் மனிதர்கள். என்னை சிரிப்பவர்களை பார்த்து நான் சிரிக்கக்கூடிய காலம் வரும் சித்ரா. இது ஒரு அக்கினி நெருப்பு ஆகும். அனைத்தையும் கண்ணில் காட்டி விட்டு இது உனக்கு கிடையாது என சொல்வது போல இருக்கிறது என்று வருத்தங்களுடன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மனோபாலா.