தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றம்  தொடர்பாக இதுவரை பாஜக தேசிய தலைமையோ,  மாநில தலைமையோ ஏன் கூட்டணி முறிந்தது? என்ற ஒரு தகவலை வெளியிடாமல் இருந்தது. கட்சியின் மேலிடமும் கூட்டணி தொடர்பாக எந்த ஒரு கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று பாஜக தலைமை மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில தலைமைக்கு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தான் அதிமுகவுடன் கூட்டணி விவகாரத்தில் இன்னும் ஓரிரு மாதத்தில்  உரிய முடிவெடுத்து தீர்வு காணப்படும் என பாஜக வட்டாரங்கள் தற்போது தகவல் தெரிவித்து இருக்கின்றது. குறிப்பாக அவர்கள் தெரிவித்து இருக்க கூடியது.  தேர்தலுக்கு இன்னும் 7, 8  மாதங்களுக்கு மேல் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தை ஒரு மாதத்திற்கு பின் முடிவெடுப்பதற்கு பாஜக தலைமை திட்டம் திட்டி இருப்பதாக தெரிவிக்கிறது.