தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இதற்கு முன்னால் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் பல்வேறு ஆலோசனைகளை நம்முடைய கழகத்தினுடைய அண்ணன் பண்ருட்டியார் அவர்கள் நமக்கு தெரிவித்திருக்கிறார்கள். இனி வருகின்ற காலம் தேர்தல் காலமாக வர இருக்கின்றது.

தேர்தல் காலமாக இருக்கின்ற காரணத்தினால் நாம் செய்ய வேண்டிய கடமைகள், பொறுப்புகள் நம்மையே சார்ந்து இருக்கிறது என்பதனை நாங்கள் பலமுறை எடுத்துச் சொல்லி இருக்கின்றோம். இன்றும் அதை எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

அதை செய்திட வேண்டிய பொறுப்பும், கடமையும் உங்களுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் நினைவு கூற கடமைப்பட்டு இருக்கிறோம். பூத் அளவிலான கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று சொன்னால் ?  நிர்வாகிகள் அளவிலான முழு பட்டியலையும் நாம் தயார் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டங்களில் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற தொகுதிகள் எவ்வாறு,  எந்த அளவிற்கு இருக்கிறது. ஒரு ஒரு சட்டமன்ற தொகுதியிலும் நகர் கழகம், ஒன்றிய கழகம், மாவட்ட கழகம்,  பேரூராட்சி – ஊராட்சி – ஊராட்சிகளுக்கு கீழ் இருக்கின்ற கிளை கழகங்கள் இவை அனைத்திலும் உருவாக்கப்பட வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல் அதற்கு கீழ் இருக்கும் நிர்வாகிகள்…. உதாரணத்திற்கு ஒரு நகரம் என்றால் ? நகர செயலாளர் வார்ட் உருவாக்க வேண்டும். வார்டுகளுக்கு வார்டு செயலாளர், அந்த வார்டு செயலாளருக்கு கீழே எட்டு நிர்வாகிகள். அமைப்பு ரீதியான தேர்தல், அதைப்போல மாநகராட்சி – நகராட்சி – பேரூராட்சி.

அடுத்து ஊராட்சி,  ஊரக உள்ளாட்சி என்றால் ? ஒன்றியங்கள். அந்த ஒன்றியங்களில் கிளை கழகங்கள். ஒவ்வொரு  ஒன்றியத்திலும் 100, 200, 300 என்ற கிளைக் கழக இருக்கிறது.ஒவ்வொரு கிளை கழகத்திலும் எட்டு நிர்வாகிகள். இப்படி நாம் கழக அமைப்பு ரீதியான நிர்வாகிகளை நியமித்து, ஒரு மாதத்திற்குள் உங்களுடைய பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று நான் அன்போடு உங்களை கேட்டுக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

அதற்கு பின்னால் தான் நாம் பூத் கமிட்டி அமைப்பதற்கு ஒரு நல்ல வழிமுறை நமக்கு கிடைக்கும். நிறைவாக நிர்வாகிகள் நியமித்துவிட்டோம் என்று சொன்னால் ? பூத்து கமிட்டி அமைப்பது மிக சுலபமாக இருக்கும்.  அதற்கு பின்னால் ? நாம் உறுப்பினர் படிவங்களை அமைப்பு ரீதியாக இருக்கின்ற அனைவரும் தந்து,  உண்மையான உறுப்பினர்களை சேர்க்கப் போவது நாம் மட்டும்தான் என்பதை நிரூபிக்க காத்திருக்கிறோம்.

இந்த பணிகள் எல்லாம் வருகின்ற  டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதை முடித்து,  100 க்கு 100  முடிகின்ற நேரத்தில் எந்த தேர்தல் வந்தாலும் சரி… நாடாளுமன்றத் தேர்தல் வந்தாலும் சரி…  வெல்லப் போவது புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினார்களோ, அந்த நோக்கத்தை நடைமுறைப்படுத்துகின்ற ஒரே இயக்கமாக நம்முடைய இயக்கம் தான் இருக்கும் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டி, தாமாகவே நம்முடைய கழகம் நம் இடத்தில் வந்து சேரும் என்ற நல்ல செய்தியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்  தெரிவித்தார்.