மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, நான் வண்டியில் வந்தபோது இளைஞர்கள் என் வண்டியை தடுத்துட்டாங்க. என்ன என கேட்டேன் ? சார் நீங்க சண்டை போட்டுக்கொள்ளுங்கள் சார். எங்களை ஏன்  வம்புல இருக்கீங்க என கேட்டார்கள்.   ஏம்பா என்கிட்ட தகராறு என கேட்டேன்.இல்ல நீங்க பண்றது எல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல சார் என கேட்டார்கள். உடனே நான், யோவ் என்னய்யா…  ஏன் ஐயா  சண்டைக்கு வர ? என்ன என சொல்லு ? என கேட்டேன்.

நேற்று நீங்க அப்படி சொல்லி இருக்க கூடாது என சொன்னதும், நான் என்ன சொன்னே நான்… என்ன சொன்னோம் சொல்லு ? அப்படின்னு டென்ஷன் ஆயிட்டேன்… உடனே அவர், புரட்சி தமிழர் என்று எப்படி சொன்னீங்க. ஆமா..!  புரட்சித்தமிழன் என நாங்க சொல்லலையா என சொன்னேன். உடனே அவர் நாங்க யார் தெரியுமா ? என கேட்டார். உடனே நான்… அதான்   சொல்லு, அதைத்தானே கேட்டுட்டு இருக்கேன் என சொன்னேன்.

சத்யராஜ் ரசிகர் மன்றத்திலிருந்து வருகின்றேன். அவரை தான்  புரட்சி தமிழன் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட எங்க தலைவரை புரட்சி தமிழன் என நாங்க சொல்றோம். அவர் சீர்திருத்த கொள்கையில் வந்தவர்,  மிகவும் பகுத்தறிவோடு பேசக்கூடியவர். அவரை  நாங்க புரட்சி தமிழன் என சொல்லுற  எடத்துல….  நீங்க புரட்சி தமிழன் என சொல்லி…. ஒரு முட்டாள் பய பெயரை சொல்லுறீங்களே… இதெல்லாம் நியாயமா ? அப்படின்னு கண்ணாபின்னானு  பேச ஆரம்பிச்சிட்டாங்க.

மீதி வார்த்தை எல்லாம் நான் சொல்ல முடியாது. எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாதுடா. இது பெரிய ஆராய்ச்சி. அங்க பெரிய பெரிய டான் எல்லாம் இருக்காங்க. அவங்க எல்லாம் சேர்ந்து மதுரையில் ஒரு மீட்டிங் நடத்தி,  இப்படி ஒரு ஆராய்ச்சி கண்டுபிடிச்சு சொல்லி இருக்காங்க என சொன்னேன் என தெரிவித்தார்.