இன்றைய காலத்தில் செல்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. அந்த வகையில் செல்போன்களின் பயன்களை பற்றி பரிட்சையில் கேட்ட கேள்விக்கு மாணவன் ஒருவன் பதிலளித்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பதிலளித்த மாணவனுக்கு ஆசிரியர் முழு மதிப்பெண்களையும் வழங்கி பாராட்டியுள்ளார்.
கேள்வி:
செல்போன்களின் பயன்கள் என்ன?
பதில்:
போன் இல்லை என்றால் மனநிலை சரியாக இருக்காது. மனநிலை சரியாக இல்லை என்றால் படிக்க முடியாது. படிக்கவில்லை என்றால் வேலை கிடைக்காது. வேலையில்லை என்றால் பணம் கிடைக்காது. பணம் இல்லை என்றால் சாப்பாடு கிடைக்காது. சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும். அதனால் உருவத்தில் மாற்றம் ஏற்படும். உருவம் நன்றாக இல்லை என்றால் யாரும் காதலிக்க மாட்டார்கள். யாரும் காதலிக்கவில்லை என்றால் கல்யாணம் நடக்காது. கல்யாணம் நடக்கவில்லை என்றால் தனிமையாக உணர்வோம். தனிமையாக இருந்தால் கவலை ஏற்படும். கவலை மன அழுத்தமாக மாறும். மன அழுத்தம் ஆரோக்கியத்தை பாதித்து இறுதியில் மரணம் ஏற்படும்.