துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் ஆக பதிவான இந்த நில நடுக்கம் ஏற்படுத்திய தாக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் பிரிந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. மேலும் நிலநடுக்கம் நிகழ்ந்து பத்து நாட்கள் நெருங்கும் சூழலில் ஊர் எங்கும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலைபோல் கட்டிடக்கழிவுகள் குவிந்து கிடக்க இன்னமும் சில இடிபாடுகளுக்குள் அடியில் அபாய குரல் கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்துள்ளது. இதை காட்டிலும் வீடின்றி உரை பனியில் தவித்தவருக்கு உதவி செய்வதில் மீட்பு குழுவினரின் கவனம் திரும்பியுள்ளது. தெற்கு துருக்கியில் இடிபாடுகளுக்கு இடையே இருந்து இன்னும் மெல்லிய அபயக்குரல் கேட்பதாக மீட்பு குழுவினர் கூறுகின்றனர். இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு துருக்கி அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, இப்போது இங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய இயற்கை பேரிடரை துருக்கி எதிர் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது மனித குலத்திற்கு ஒரு சவால் தான் என்றும் எங்கள் நாட்டின் குடிமகனுக்கு தேவையான பொருள் மற்றும் நிதி உதவியையும் உணர்வுபூர்வ ஆறுதலையும் தருவோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.