உலக அளவில் 2022-ம் ஆண்டு அதிக கார்களை விற்பனை செய்த நாடுகளின் பட்டியலை நிக்கெட் ஏசியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி உலக அளவில் அதிக கார்களை விற்பனை செய்த நாடுகளில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. அதன்படி சீனா மொத்தமாக 2.6 கோடி கார்களை விற்பனை செய்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் 1.5 கோடி கார்களை விற்பனை செய்து அமெரிக்கா இருக்கிறது. அதன் பிறகு மூன்றாம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தியாவில் 42.5 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது.

இதனையடுத்து ஜப்பான் 41.6 லட்சம் கார்களை விற்பனை செய்து 4-ம் இடத்திலும், ஜெர்மனி 28.7 லட்சம் கார்களை விற்பனை செய்து ஐந்தாம் இடத்திலும், பிரேசில் 19.5 லட்சம் கார்களை விற்பனை செய்து ஆறாம் இடத்திலும், யுகே 18.9 லட்சம் கார்களை விற்பனை செய்து ஏழாம் இடத்திலும், பிரான்ஸ் 18.7 லட்சம் கார்களை விற்பனை செய்து எட்டாம் இடத்திலும் இருக்கிறது. இதைத் தொடர்ந்து 16.5 லட்சம் கார்களை விற்பனை செய்து தென் கொரியா 9-வது இடத்தில் இருக்கிறது.‌மேலும் பத்தாவது இடத்தில் 15.5 லட்சம் கார்களை விற்பனை செய்து கனடா இருக்கிறது.