டிக்டாக் புகழ் டான்சர் ரமேஷ் சில நாட்களுக்கு முன்னதாக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என தகவல் வெளியானது. இவர் ஜீ தமிழ் டிவியில் ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதையடுத்து துணிவு, ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதற்கிடையில் டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

அவரை 2ஆம் மனைவி கொலை செய்திருக்கலாம் என ரமேஷின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த நிலையில் தற்போது டான்சர் ரமேஷ் குடிப்பதற்கு காசு கேட்டு தொல்லை செய்ததால் அவரின் 2ஆம் மனைவி கம்பால் அவரை தாக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. குடிக்க காசு கொடுக்கவில்லை எனில் தற்கொலை செய்துகொள்வேன் என அவரே அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.