பிரபல ஹாலிவுட் நடிகையான அன்னி வெர்ஷிங்(45), “புரூஸ் அல்மைட்டி”, “பிலோ த பெல்ட்” ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு 24, போஷ், டைம்லெஸ் உட்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக இருந்தார். 40க்கும் அதிகமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். மேலும் “தி லாஸ்ட் ஆப் அஸ்” எனும் வீடியோ கேமில் டெஸ் கதாபாத்திரத்துக்கு அவர் குரல் கொடுத்து இருக்கிறார்.

இதற்கிடையில் அன்னி வெர்ஷிங்குக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அன்னி வெர்ஷிங் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது  மரணம் குறித்த தகவலை கணவர் ஸ்டீபன் புல் தெரிவித்துள்ளார். தற்போது அவரது மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.