டெல்லியை  சேர்ந்த சிவம் தியாகி என்பவர் இந்திய தபால் சேவை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதேபோல் கேரளாவை சேர்ந்த இந்திய வருவாய் சேவை அதிகாரியாக ஆர்யா நாயர் என்பவர் பணியாற்றி வருகிறார். கேரளாவின் கோட்டை மாவட்டத்தில் உள்ள சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இவர்களது திருமணம் கடந்த 27-ஆம் தேதி எளிமையான முறையில் நடைபெற்றது. உறவினர்கள், கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாமல் இவர்களது திருமணம் நடைபெற்றது மட்டுமல்லாமல் இவர்கள் அனாதை குழந்தைகள் 20 பேரின் கல்வி செலவையும் ஏற்றுள்ளனர்.

இதுகுறித்து ஆர்யா நாயர் கூறியதாவது, திருமணத்துடன் தொடர்புடைய கொண்டாட்டங்களை கைவிடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அனைத்து உறவினர்களும், நண்பர்களும் எங்களது திருமணத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். எங்களது இந்த திருமண முடிவை முதலில் உறவினர்கள் ஏற்கவில்லை. ஆனால் தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர். எங்களது இந்த திருமணம் வருங்கால  மணபெண்கள் மற்றும் மணமகன்களுக்கு ஆடம்பர திருமணங்கள் தேவை இல்லை என்ற எண்ணத்தை அளிக்கும். வருங்காலங்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ இருப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.