CUET PG தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று இரவு வெளியிட இருப்பதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் CUET PG தேர்வு மார்ச் 11 முதல் மார்ச் 18ஆம் தேதி வரை நடைபெற்றது. ஏப்ரல் ஐந்தாம் தேதி மாதிரி விடைத்தாள் வெளியான நிலையில் இன்று  https://pgcuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் இறுதி விடைத்தாள் வெளியிடப்பட உள்ளது.