ஆஸ்திரியாவைச் (Austria) சேர்ந்த பிரபல மாடல் அழகியும், அழகுக்கலை நிபுணருமான ஸ்டெபானி பைபர் (Stefanie Pfeiffer) கடந்த மாதம் 23-ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவருடைய முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, காதலைக் கைவிட்ட ஆத்திரத்தில், ஸ்டெபானி பைபரை கழுத்தை நெரித்துக் கொன்றதாக அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார்.
மேலும், அவரது உடலை ஒரு சூட்கேசில் அடைத்து, ஸ்லோவேனியா (Slovenia) எல்லை அருகே புதைத்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து, போலீசார் அந்தச் சூட்கேஸைத் தோண்டி எடுத்துச் சடலத்தைக் கைப்பற்றினர். இந்தச் சம்பவத்தில், கொலைக்கு உதவியதாகக் காதலனின் தந்தை மற்றும் சகோதரனிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
