விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான சித்திரை கனி என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று சித்திரை கனி அரிவாளால் ஆறுமுகத்தை வெட்டியுள்ளார்.

இதனால் படுக்காயமடைந்த ஆறுமுகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சித்திரை கனியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் சித்திரை கனிக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.