கடலூர் மாவட்டத்தில் உள்ள சலங்கைகார தெருவில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2002-ஆம் ஆண்டு தனது இழுவை படகை கடலூர் துறைமுகம் எல்லையில் இயக்குவதற்கு உரிமம் பெற வேண்டி விண்ணப்பித்துள்ளார். அப்போது கடலூர் துறைமுக அலுவலக நிர்வாக அலுவலர் முகமது அலி என்பவர் 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஜெயவேல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ஜெயவேல் பணத்தை கொடுத்தபோது போலீசார் முகமது அலி கையும், களவுமாக கைது செய்தனர்.

இந்த வழக்கில் முகமது அலி மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இதனால் கடந்த 2013-ஆம் ஆண்டு அவர் கடலூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடலூர் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் மேல்முறையீடு செய்தனர். அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் முகமது அலிக்கு 1 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.