ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இதனால் 15 வயதான தனது 2-வது மகளை தன்னுடன் வைத்து பராமரித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு கூலி தொழிலாளி வீட்டிற்கு மதுபாட்டிலை வாங்கி வந்து பெண்ணுக்கும், வளர்ப்பு மகளுக்கும் மதுவை ஊற்றி கொடுத்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளார். இதனையடுத்து தொழிலாளி வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்றம் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 7000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1 1/2 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.