கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை சிங்காரவேலன் நகரில் கூலி வேலை பார்க்கும் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வினோத் குமார் ஓசூரில் தங்கி வேலை பார்த்தபோது 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வினோத்குமார் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவில் நீதிமன்றம் வினோத்குமாருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.