தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் நடிப்பில் சென்ற ஜனவரி மாதம் 11ஆம் தேதி துணிவு திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இத்திரைப்படம் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது. அதே நாளில் விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆகி கடுமையான போட்டி நிலவியது. இதனால் பொங்கல் வின்னர் – ரியல் வின்னர் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

துணிவு திரைப்படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இத்திரைப்படம் டாப்பில் இருப்பதால் துணிவு தான் ரியல் வின்னர் என ரசிகர்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றார்கள்.