சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் தீபிகா என்பவர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இந்நிலையில் சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தனது காதலரான ஜான் டி பிரிட்டோவிடம் தனது காதலை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தீபிகா மற்றும் அவரது காதலர் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடல் மாசுபாடு மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஆழ்கடலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி புதுச்சேரி கடல் பகுதியில் சுமார் 50 அடி ஆழத்தில் திருமண கோலத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து இந்த தம்பதிகள் கூறியதாவது, ஆழ்கடலில் திருமணத்திற்கு சுமார் 40 நிமிடங்கள் ஆனது. ஆழ்கடல் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு திருமணம் செய்து கொண்டோம் என்று அவர்கள் கூறினர்.