சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் தனியார் நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மேலாளராக இருப்பவர் ராஜராஜன் (37). இந்த அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் ராஜராஜன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் தகாதவாறு நடந்துள்ளார். தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான அந்தப் பெண் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அலுவலக மேலாளர் ராஜ ராஜனை தாம்பரம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.