
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் மசூம்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஷாம்லால் சவுராசியா (55). இவருக்கு பாஸ்மதி சௌராஷியா(50) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் அப்பகுதியில் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் கொடூரமாக ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு வீட்டு வாசலிலேயே வீசப்பட்டுள்ளனர்.
வீட்டிற்கு வெளியிலேயே தம்பதியினர் இருவரின் உடல்கள் கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இக்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தம்பதியினர் இருவரையும் கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கணவன், மனைவி இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.