உலகிலேயே மிகவும் விசித்திரமான கட்டிடக்கலைக்குச் சொந்தமானது சீனா. அங்கே ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில், மக்கள் அனைவரும் நிலத்திற்கு அடியிலேயே (Underground) வீடுகளைக் கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த வினோதமான நிலத்தடி வீடுகள் ‘யாவோடாங்குகள்’ (Yaodongs) என்று அழைக்கப்படுகின்றன. இவை சுமார் 2,000 முதல் 4,000 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளன.
சீனாவின் லோஸ் பீடபூமி (Loess Plateau) அமைந்துள்ள ஷான்ஷி, ஷான்சி மற்றும் கான்சு மாகாணங்களில், கிட்டத்தட்ட 4 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த யாவோடாங்கு குகை வீடுகளில்தான் இன்றும் வசித்து வருகின்றனர்.
இதற்கு முக்கியக் காரணம், வீடுகள் கட்டப் பயன்படும் லோஸ் மண் மென்மையானதாகவும், எளிதில் செதுக்கக்கூடியதாகவும் இருப்பதேயாகும். மேலும், அடர்த்தியான மண் சுவர்களைக் கொண்ட இந்த வீடுகள், உள்ளே நிலவும் வெப்பநிலையை இயற்கையாகவே சீராக்குகின்றன.
இதனால், கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் சூடாகவும் இருப்பதுடன், கட்டுமானச் செலவும் மிகக் குறைவாக இருக்கும். இருப்பினும், நிலநடுக்கம் போன்ற இயற்கை இடர்களுக்கு (Natural Disasters) எளிதில் பாதிக்கப்படுவது இதன் பெரிய குறைபாடு ஆகும்.
