
தெலுங்கானா மாநிலம் ஹையத் நகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ரோஹித் என்ற வாலிபர் இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில நாட்களாக ஆபாசமான செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த வாலிபர் அங்கு சென்று சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
సోషల్ మీడియాలో ఇంటర్ విద్యార్థి వేధింపులకు భయపడి 13 సంవత్సరాల మైనర్ బాలిక ఆత్మహత్య
పోలీసులకు ఫిర్యాదు చేసినా పట్టించుకోలేదని, పోలీసుల నిర్లక్ష్యంతో తన కూతురు మరణించిందని తల్లిదండ్రుల ఆవేదన
హయత్ నగర్ పీఎస్ పరిధిలోని రంగనాయకుల గుట్ట ప్రాంతానికి చెందిన 13 సంవత్సరాల మైనర్ బాలికను,… pic.twitter.com/Uaesa4W0G7
— Telugu Scribe (@TeluguScribe) May 6, 2025
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் “2 நாட்களுக்கு முன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோதும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வேளை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் என் மகள் உயிரோடு இருந்திருப்பாள்” என்று வேதனையுடன் கூறினார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.