கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் விவசாயியான ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பண்ருட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தனது நிலத்திற்கு ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக 5 லட்சத்து 67 ஆயிரத்து 540 ரூபாய்க்கு பிளாஸ்டிக் குழாய்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் போது அந்த குழாய்கள் தரமற்றது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராமமூர்த்தி கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் சம்பந்தப்பட்ட பிளாஸ்டிக் குழாய் விற்பனை செய்த நிறுவனம் ராமமூர்த்திக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, குழாய் வாங்கிய தொகையை வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.