கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில் கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் சித்தாராமையா, 120 இடங்கள் வரை காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். தேர்தல் வெற்றி டி.கே. சிவகுமாருக்கோ, சித்தாராமையாவுக்கும் சொந்தமானது அல்ல. ஒட்டுமொத்த காங்கிரஸுக்கும் சொந்தமானது என தெரிவித்தார்.