இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் பேடிஎம்ஃ கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை வைத்திருப்பார்கள். இந்த செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது சுலபமாக இருப்பதால் பலரும் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் பேடிஎம் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது Paytm UPI LITE என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி நொடிப்பொழுதில் யாருக்கு வேண்டுமானாலும் பணத்தை அனுப்பலாம். அதாவது நாம் யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு முதலில் பாஸ்வேர்ட் போட வேண்டும்.

ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி மூலம் ரூ. 200 வரை பேடிஎம் இல் PIN இல்லாமல் அனுப்பி கொள்ளலாம். இந்த வசதி பேடிஎம் வாலெட் மூலமாக பணம் அனுப்பும்போது மட்டுமே கிடைக்கும். இந்த புது வசதியை ஆக்டிவேட் செய்பவர்களுக்கு 100 ரூபாய் வரை கேஷ் பேக் சலுகைகளும் கிடைக்கிறது. இந்நிலையில் பொதுவாக நாம் ஒருவருக்கு பணத்தை அனுப்பும் போது பேடிஎம் இல் பாஸ்வேர்டு கண்டிப்பாக போட வேண்டும். இதனால் பணம் அனுப்பும்போது சற்று தாமதமாகலாம். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி மூலம் இனி பாஸ்வேர்ட் இல்லாமல் பணத்தை அனுப்பலாம். மேலும் இந்த புதிய வசதிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.