மார்ச் ஒன்றாம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இன்று மாலை முதலமைச்சரை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்பட கண்காட்சியை நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவர்மான கமல்ஹாசன் தொடங்கி வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து சிறப்பு கருத்தரங்கம், பட்டிமன்றம், மருத்துவ முகாம் மற்றும் பல நலத்திட்ட பணிகள் மேற்கொள்ள திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இன்று முதல் மார்ச் 2-ம் தேதி வரை முதலமைச்சருக்கு 07127191333 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்க திமுக தொழில்நுட்ப பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் www.selfiewithcm.com என்ற இணையதளத்தில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து முதலமைச்சருடன் விஷுவல் செல்பி எடுத்துக்கவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்தகைய சிறப்பு ஏற்பாடுகள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.