சென்னையில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு செய்தியாளர்களுக்கு அதிரடியான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தவெக அரசின் தற்போதைய செயல்பாடுகளைப் வெகுவாகப் பாராட்டியுள்ள அவர், “முதலமைச்சர் விஜய் எனக்கு தம்பி என்று சொல்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்; தமிழ்நாட்டில் ஒரு தெளிவான அரசாங்கத்தை இன்று நம்மால் பார்க்க முடிகிறது” என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

​மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனேயே தவெக அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட குஷ்பு, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். “ஆட்சி அமைத்த வெறும் 10 நாட்களில் எப்படி ஒட்டுமொத்த மாற்றத்தையும் கொண்டுவர முடியும்? நல்ல மாற்றம் வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் மக்கள் இந்த அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர்; எனவே தவெக அரசுக்குக் கொஞ்சம் நேரம் கொடுத்தால், நிச்சயமாகப் பெரிய மாற்றம் வரும்” என்று குஷ்பு பாசிட்டிவ் ஆகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது