விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றவர் விக்ரமன். பிக்பாக்ஸில் துப்புரவு தொழிலாளர்கள் மனித கழிவுகளை அல்லும் அவலம் பற்றி தனது நாடகத்தில் வெளிப்படுத்தி இருந்தார். அப்போது அவருக்கு பாராட்டுகள் குவிந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவருக்கு துப்புரவு தொழிலாளர்கள் மாலை அணிவித்து மகுடம் சூட்டி பாராட்டியுள்ளார்கள்.

அவருக்கு கிடைத்த பாராட்டை பார்த்த அசீமும் தனலட்சுமியும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேலும் அவர்களை வெறுப்பேற்றும் வகையில் ரட்சிதா மற்றும் சிவின் பாராட்டி கூச்சலிட்டு கொண்டாடினார்கள். இதனால் அசீம் முகம் சுருங்கியது. தற்போது பிக்பாக்ஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.