சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு இது. அது மட்டும் அல்லாமல் சாக்லேட்டை சுவைக்கும் போது மனதில் இன்பமான நினைவுகள் அலைமோதும். அப்படி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான சாக்லேட்டுக்கான ஒரு ஸ்பெஷல் டேவாக பிப்ரவரி ஒன்பதாம் தேதி கொண்டாடப்படுகிறது. உங்கள் மனைவி, பெண் தோழி அல்லது நண்பர்களுக்கு சாக்லேட் கொடுத்து மகிழ்விக்கலாம்.

சாக்லேட் முதன் முதலில் 1550 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகமானது. இதையொட்டி உலக சாக்லேட் தினம் ஆண்டுதோறும் சூலை 7-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இருப்பினும் காதலர் தினம் வருகின்ற பிப்ரவரி மாதத்திலும் சாக்லேட் கொண்டாட்டத்திற்கு இடம் அளிக்கப்படுகிறது. வாக்குறுதி நாள், கிஸ் டே, ஹக் டே என்று பல நாட்களைக் கொண்டதாக காதலர் தின வாரம் இருந்தாலும் நேரடியாக நாம் சுவைக்கும் சாக்லேட் தினம் குதூகலம் நிறைந்ததாக இருக்கிறது.

காதலர் தினத்திற்கான கொண்டாட்டம் என்பதை தாண்டி சாக்லேட் சாப்பிடுவதால் பலவகையிலும் நன்மை உண்டு என்பதை நாம் கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு சாக்லேட் சாப்பிட்டால் நம் சருமம் பளபளப்பாக மின்னும். சாக்லேட்டில் ஆன்ட்டி ஆக்சைட் சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள கிளவானாய்டு என்ற சத்து நம் உடலுக்கு ரிலாக்ஸ் அளிக்கக் கூடியதாகும்.

மற்ற சாக்லேட்டுகளை காட்டிலும் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் மிகுதியான நன்மை உண்டு. இது நம் மனதில் உள்ள ஸ்ட்ரெஸ் அளவுகளை குறைக்கும். டார்க் சாக்லேட்டில் உள்ள க்ளவனாய்டு நமது சர்க்கரை அளவை மிகுதியாக அதிகரித்து விடாது. ஆகையால் சர்க்கரை நோய் வந்துவிடும் என்ற அச்சமின்றி இதை சாப்பிடலாம். சாக்லேட் தினத்திற்கு அடுத்த நாள் டெடி தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெடி பியர் மற்றும் இதர பொம்மைகளை பரிசாக வழங்கி மகிழலாம். ஹாப்பி டெடி டே..!!!