2016 ஆம் வருடம் விபத்து ஏற்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள கதிர்வீச்சு நீரை கடலில் கலப்பதற்கு ஜப்பான் நாட்டு அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். இந்த முடிவை தொடர்ந்து சீனா ஜப்பான் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய தடை செய்துள்ளது.

பல வருடங்களாக சேகரித்து வைக்கப்பட்ட அந்த நீர் கதிர்வீச்சுக்கள் நீக்கப்பட்டு கடலில் கலக்க இருப்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஃபுகுஷிமா அணு உலை நீரை கடலில் கலக்கக்கூடாது என்று தென்கொரியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்த நிலையில் தான் சீன அரசு ஜப்பானிடமிருந்து உணவு இறக்குமதி செய்யக்கூடாது என்ற முடிவை எடுத்துள்ளது.