பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இலங்கையும் சீனாவும் சேர்ந்து இந்தியாவை உளவு பார்ப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்டது தான் கட்சத்தீவு. இந்த கட்சி தீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்திய கிறிஸ்தவர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் இன்று திடீரென புத்தர் சிலையை வைத்திருப்பது கச்சத்தீவை சிங்களமயமாக்கும் நடவடிக்கையாகும்.

புத்தர் சிலையை வைத்துவிட்டு ஆண்டுதோறும் அதற்கு விழா நடத்தினால் கண்டிப்பாக மத நல்லினத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். அது தேவையற்ற பதற்றத்தை உண்டாக்கும். தற்போது புத்தர் சிலையை வைத்து சீனாவும், இலங்கையும் கச்சத்தீவில் முகாமிட்டிருப்பது தமிழகத்தையும் தென்னிந்தியாவையும் உளவு பார்ப்பதற்காக தான். இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்டாலும் புனித அந்தோனியார் ஆலய திருவிழா மற்றும் அடிப்படை வளர்ச்சிக்கு இந்தியா தான் உதவுகிறது. எனவே இந்த விஷயத்தில் உடனடியாக இந்திய அரசு தலையிட்டு கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ‌