இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப் பெரிய புத்தர் சிலையை சிங்கள கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். புத்தர் சிலை வழிபாடு எனும் பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சத்தீவில் முகாமிடச் செய்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை உணவு பார்ப்பதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் மட்டுமே இருக்கிறது. அங்கு வருடந்தோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் ஈழத்தை சேர்ந்த கிறித்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தமிழர்கள் கலந்துகொள்கின்றனர்.