நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பியின் தேவூர் அருகே பார் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகிய இருவரும் சென்று சரக்கு கேட்டு தகராறு செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் பாஸ்கர் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகியோர் பாஸ்கர் வீட்டில் நேற்று இரவு 10 மணியளவில் பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர்.

வீட்டின் முன்புறம் பாஸ்கரின் மாமனார் பாலசுந்தரம் படுத்திருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். வீட்டின் முன்பு தீப்பற்றி எரிவதை கண்ட குடும்பத்தினர் உடனடியாக ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.