கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதனபட்டு கிராமத்தில் மஞ்சுநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தஷ்வந்த் என்ற மகனும், பிரதிக்சா ஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஜானகி தனது குழந்தைகளுடன் அக்கா மகாலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு பிள்ளைகள் இருவரும் மகாலட்சுமியின் கணவர் தனபதிக்கு சொந்தமான செங்கல் சூளையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் குட்டையில் விழுந்து தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தஸ்வந்த் மற்றும் பிரதிக்சா இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.