சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த சென்னை சேர்ந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணாக பேசினார். உடனே அதிகாரிகள் அந்த வாலிபரின் உடைமைகளை சோதனை செய்து பார்த்ததில் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரை தனி அறைக்கு கூட்டிச் சென்று சோதனை செய்ததில், அவரது உள்ளாடையின் உள்ளே தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

மேலும் சிங்கப்பூரில் இருந்து வந்த ஒரு பெண்ணின் கைப்பையை சோதனை செய்தனர். அதில் ரூ.27 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 550 கிராம் தங்கம் இருந்தது  தெரியவந்தது. உடனே அதை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதையடுத்து சார்ஜாவில் இருந்து வந்த வாலிபர் ஒருவரின் காலில் இருந்த ‘ஷூ’வில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 484 கிராம் தங்கம்  கைப்பற்ற பட்டது.

அதேபோல் கொழும்பில் இருந்து வந்த வாலிபரின் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.31 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 625 கிராம் தங்கம்  அதிகாரிகளால் கைப்பற்றபட்டது. இவ்வாறு பெண் உள்பட 4 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 8 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 169 கிராம் தங்கம் பறிமுதல் செய்யபட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இதனை தொடர்ந்து கடத்தலின் பிண்ணனியில் இருப்பவர்கள் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.