சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி செல்ல தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பயணி தவறுதலாக எமர்ஜென்சி கதவை திறந்து விட்டார். இந்த சம்பவம் கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்ற நிலையில் தற்போது தான் வெளிவந்துள்ளது. அதாவது விமானத்தின் எமர்ஜென்சி கதவை பயணி திறந்ததால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அவசர கதவு சரிபார்க்கப்பட்டது. அதன் பிறகு விமானமும் பரிசோதனைப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டு மீண்டும் சோதனை செய்யப்பட்ட பிறகு விமானம் கிளம்பி சென்றது. கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட பயணி தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் சிவில் போக்குவரத்து விமான இயக்குனராகமும் விமான பாதுகாப்பில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.