
சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . அந்த வகையில் தற்போதும் சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு பல்வேறு துறையை சேர்ந்த IAS அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் நில நிர்வாக இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கூட்டுறவுத்துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சித்தார்த் ஜாகடே நியமீட்கப்பட்டுள்ளார்.
வேளாண் துறை செயலாளர் நந்தகோபால் வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவண பிரிவு இயக்குனராக மாற்றம். பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருடைய சிறப்பு செயலாளர் ஹனிஷ் சாப்ரா, தற்போது TUFIDCO என்று சொல்லக்கூடிய தமிழக அரசின் நகர்ப்புற நிதி கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சித்ரா விஜயன் ஐஏஎஸ் தமிழ்நாடு நகர்ப்புற புதுப்பித்தல் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
