சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை கருணாநிதி தெருவில் பூங்கொடி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரம் பூங்கொடி சைதாப்பேட்டை கூத்தாண்டவர் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பூங்கொடியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலி, 2 பவுன் சிறிய தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்ததால் நிலைதடுமாறி பூங்கொடி கீழே விழுந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.

அதே நேரம் ஒரு ஆட்டோ பூங்கொடி மீது மோதுவது போல வந்து பிரேக் போட்டு நின்றது. இதனை பார்த்ததும் நகையை பறித்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பூங்கொடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.