தமிழகத்தில் 10,12 -ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்க இருக்கின்ற நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் விரைவில் நுழைவு சீட்டுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டு வெளியானவுடன் மாணவர்கள் www.cbse.nic.in அல்லது www.cbse.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஐந்தாம் தேதி முதல் 10 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு நடைபெற உள்ளது.

இதில் மார்ச் 21-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் ஏப்ரல் 5-ம் தேதி 12-ஆம் வகுப்பு பொது தேர்வு நிறைவடைய உள்ளது. மேலும் விவரங்களை  cbse.nic.in என்னும் சி.பி.எஸ்.சி இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.