10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் CBSE மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகளை, cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு எண், தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். பிப்.15ஆம் தேதி தொடங்கும் இந்த தேர்வு, (10ம் வகுப்பு) மார்ச் 13ஆம் தேதியும், (12ஆம் வகுப்பு) ஏப்ரல் 2ஆம் தேதியும் நிறைவுபெறுகிறது