ஒடிசா மாநிலத்தில் அடுத்தடுத்து ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதற்கு ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் ரயில் விபத்துக்கு தீவிரவாதிகளின் சதி செயல் காரணமாய் என்பது குறித்து ஆராய சிபிஐ விசாரணை கோர‌முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.