கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு தண்ணீர் பந்தல் மகேஸ்வரி நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரர் மற்றும் தந்தை தங்கவேலுடன் இணைந்து சொந்தமாக உணவு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு நீலகிரியை சேர்ந்த சுரேந்தர் என்பவர் காசாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணக்கு விவரங்களை தணிக்கை செய்தபோது சுரேந்தர் உணவு நிறுவன வங்கி கணக்கிலிருந்து 6 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சுரேந்தர் மீது மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் சுரேந்திரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.