கார் என்பது ஆடம்பரம் என்று கருதப்பட்ட காலம் மாரி தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும் கார் வாங்குவது என்பது தங்கம் வாங்குவதை போல் அல்ல. இதனிடையே கார் வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். கார் வாங்கும் முன் என்ன விலையில் வாங்கினால் நமக்கு கடனை திரும்ப செலுத்த முடியும் என சிந்தித்து சம்பளத்தின் அடிப்படையில் காருக்கான கடனுக்கு விண்ணப்பிப்பதே சிறந்தது ஆகும்.

கார் கடனானது 8.5%-9% வரை வட்டி விகிதத்தில் கிடைக்கும். பல்வேறு வங்கிகள் மற்றும் NBFC நிதிநிறுவனங்கள் தற்போது கடன்களை வழங்குகிறது. கார் வாங்க தாங்கள் பெறக்கூடிய கடன் தொகைக்கு ஏற்றவாறு வட்டி விகிதமானது மாறுபடும். இதுகுறித்த கடனை எவ்வளவு வருடங்களில் திரும்ப செலுத்துவீர்கள் என்பதை முன்கூட்டியே கணக்கிடுவது அவசியம் ஆகும். ஏனென்றால் கடனை திரும்ப செலுத்தும் கால அளவை பொறுத்து கடனுக்கான வட்டி விகிதம், EMI போன்றவை இருக்கும். காரை அதிகம் பயன்படுத்தும்போது அதன் பராமரிப்பு அதிகம் இருக்கும். அதேபோல் தேய்மானம் மற்றும் மறு விற்பனை மதிப்பும் குறைவாகவே இருக்கும். இதனை மனதில் வைத்து கார் வாங்குவது குறித்து முடுவெடுக்க வேண்டும்.