கர்நாடகா அமைச்சரவை தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கர்நாடக முதலமைச்சர் மே 18ஆம் தேதி பதவி ஏற்கிறார். அன்றைய தினம் அமைச்சரவை அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆன சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆனால் முதல்வர் யார் என்பதில் இன்னும் தெளிவு இல்லை. ஒருபுறம் சித்த ராமையாவையும்,மற்றொருபுறம் டிகே சிவகுமாரும் முதலமைச்சராக வேண்டுமென ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் 135, பாஜக 66, ஜேடிஎஸ் 19, பிற கட்சிகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.